மலையகம்
மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

Aug 7, 2025 - 06:39 PM -

0

மஸ்கெலியாவில் காணாமல் போனவரின் உடமைகள் மீட்பு

மஸ்கெலியா, புரவுன்லோ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும், மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முன்னதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அவர் அணிந்திருந்ததாக கூறப்படும் ஆடை மற்றும் பாதணிகள் கரையோரத்தில் காணப்பட்ட நிலையில் அந்த ஆற்றில் தேடும் பணியை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

காணாமல் போனவர் பிரவுன்லோ பகுதியை சேர்ந்த (55) வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05