Aug 7, 2025 - 07:24 PM -
0
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சமஸ்டி முறையில் அதிகார பகிர்வு கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 100 நாள் செயல் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராமத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீள பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை" நோக்கமாகக் கொண்டு மக்கள் அணியின் திரள் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 3 வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் நூறு நாள் செயல்திட்டமானது கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.
தொடர்ந்து நூறு நாள் செயல் திட்டம், ஒவ்வொரு மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்று (7) வியாழக்கிழமை மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அந்தோனியார் புரம் கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
--