Aug 7, 2025 - 07:50 PM -
0
சீனாவின் சின்ஜியாங் மாகாணம், யிலி பகுதியில் உள்ள சியாட்டா சுற்றுலா மையத்தில் நேற்று (06) மாலை ஏற்பட்ட கயிறு தொங்குப்பால விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலத்தின் ஒரு கயிறு அறுந்து பாலம் ஒரு பக்கமாக சாய்ந்ததால், 29 சுற்றுலாப் பயணிகள் நீரற்ற, பாறைகள் நிறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தன நிலையில், 24 பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் உச்ச சுற்றுலா காலத்தில் நிகழ்ந்ததால், பாலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இருந்ததாகக் கருதப்படுகிறது.
மோசமான பராமரிப்பு மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாதது விபத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், பாலம் சாய்ந்து மக்கள் ஆற்றுக்குள் விழும் பதைபதைப்பூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
விபத்தைத் தொடர்ந்து, சியாட்டா சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டு, உள்ளூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வைத்திய உதவி வழங்கப்பட்டு வருகிறது. பாலத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளன.