Oct 28, 2025 - 03:00 PM -
0
இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை வலுப்படுத்த உலகளாவிய பேஷன் வர்த்தக நிறுவனமான மைக்கேல் கோர்ஸிடமிருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்பை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வரவேற்கிறது. மைக்கேல் கோர்ஸின் நீண்டகால “பசிப்பிணி நீங்குதலை காண்போம்” பிரசாரம் மூலம் வழங்கப்படும் இந்த உதவியானது உலக உணவுத் திட்டத்தின் (WFP) பாடசாலை வீட்டுத்தோட்ட ம் முதல் வகுப்பறை வரை (HGSF) முயற்சிக்கு பங்களிக்கும்.
இந்த நிதியுதவி, WFP அதன் வீட்டுத்தோட்ட ம் முதல் வகுப்பறை என்ற பாடசாலைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தை தற்போதுள்ள எட்டு மாவட்டங்களை பத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த இது உதவும், இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 250,000 குழந்தைகள் நாளாந்தம் சத்துணவு பெறுவதை உறுதி செய்யும். இந்த நிதி, 1,500 உள்ளூர் விவசாயிகள் உள்ளூர் மூலம் விவசாய உற்பத்தியை வலுப்படுத்தி அதை பாடசாலை உணவு வழங்குநர்கள் மூலம் சத்துணவு பாடசாலை குழந்தைகளுக்கு வழங்குதை நோக்கமா கொண்டது.
WFP-யின் பாடசாலை வீட்டுத்தோட்ட ம் முதல் வகுப்பறை வரை உணவு முயற்சி, உள்ளூர் உணவு முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தின் நிலைபேண்தகு நிலைமையை மேம்படுத்துகிறது. இது முதன்மையாக பெண் விவசாயிகள் மற்றும் பாடசாலை உணவு வழங்குநர்கள் தங்கள் சொந்த காய்கறிகள் மற்றும் கோழிப் பண்ணை உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்திதுகின்றது. இதனால் குழந்தைகளுக்கு புதிய, பாதுகாப்பான மற்றும் சத்தான உணவுகளை வழங்க முடியும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை பெண்களின் பொருளாதார நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது, கிராமப்புற வாழ்வாதாரத்தை ஆதரிக்கிறது மற்றும் உணவுப் பாதுகாப்பின்மைக்கு எதிரான தேசிய மீள்தன்மையை மேம்படுத்துகிறது.
இலங்கையின் பாடசாலை உணவுத் திட்டத்தை முன்னெடுப்பதில் மைக்கேல் கோர்ஸ; நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் கூட்டாண்மையை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், என்று WFP இலங்கையின் பிரதிநிதியும் வதிவிடப் பணிப்பாளருமான பிலிப் வோர்ட் கூறினார். பல குடும்பங்களுக்கு, இந்த உணவுகள் ஒரு உயிர்நாடியாகும் - ஒவ்வொரு நாளும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உணவு வழங்குநர்கள் மற்றும் விவசாயிகளின் அர்ப்பணிப்பால் இது சாத்தியமானது என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிகமாக, 30 பாடசாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடுகளால் பயனடையும், இதில் சூரிய சக்தியில் இயங்கும் சமையலறைகளை நிறுவுதல், செலவுகளைக் குறைத்தல், கழிவைக்குறைத்தல் மற்றும் நிலைபேண்தகு நிலையை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
2025 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மைக்கேல் கோர்ஸ், இலங்கையில் WFP இன் HGSF முயற்சியின் மூலம் வளர்க்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் Maxime Poiblanc புகைப்படங்களைக் கொண்ட இரண்டு சிறப்பு பதிப்பு டி-சேர்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. பருத்தி மற்றும் லினன் கலவையிலிருந்து தயாரிக்கப்பட்ட இந்த டி-சேர்ட்கள் உலகளவில் michaelkors.com மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிறைகளில் கிடைக்கின்றன, மேலும் இதன் மூலம் கிடைக்கும் அனைத்து இலாபமும் WFPக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
உணவுப் பாதுகாப்பற்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சத்துணவை வழங்குவதற்கான ஒரு பரந்துபட்ட நோக்கத்துடன், WFP உடனான மைக்கேல் கோர்ஸின் கூட்டாண்மை 2013 இல் தொடங்கியது. கடந்த தசாப்தத்தில், இந்த பிராண்ட் உலகளவில் 35 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை உணவுகளை வழங்க WFPக்கு உதவியுள்ளது.
WFP உடனான மைக்கேல் கோர்ஸின் பணி பற்றி அறிவதற்கு இங்கு அழுத்தவும்.
பட்டினியை நிறுத்தலைப் பார்க்கவும் பிரசாரத்தைப் பற்றி
2013 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பிரசாரம் பசியற்ற உலகத்தை அடைய நிதி மற்றும் விழிப்புணர்வைத் திரட்டுகிறது. இந்த முயற்சியில் இந்த பிராண்டின் கூட்டாளியாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) உள்ளது, மேலும் நிதி WFP இன் பாடசாலை உணவுத் திட்டத்தை ஆதரிக்கச் செல்கிறது. 2015 ஆம் ஆண்டில், மைக்கேல் கோர்ஸ் WFP நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்; 2016 ஆம் ஆண்டில், பசி நெருக்கடியை முன்னிலைப்படுத்தவும் தணிக்கவும் அவர் மேற்கொண்ட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்காக WFP USA ஆல் அவருக்கு மெக்கவர்ன்-டோல் தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில், இந்த பிராண்ட் WFP உடனான ஒரு தசாப்த கால கூட்டாண்மையைக் கொண்டாடியது.
மைக்கேல் கோர்ஸ் பற்றி
மைக்கேல் கோர்ஸ் உலகப் புகழ்பெற்ற, விருது பெற்ற ஆடம்பர அணிகலன்கள் மற்றும் ஆயத்த ஆடை வடிவமைப்பாளர் ஆவார். 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அவரது பெயரிடப்பட்ட நிறுவனம், தற்போது மைக்கேல் கோர்ஸ் கலெக்ஷன், மைக்கேல் மைக்கேல் கோர்ஸ் மற்றும் மைக்கேல் கோர்ஸ் மென்ஸ் ஆகியவற்றின் கீழ் பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது, இதில் அணிகலன்கள், ஆயத்த ஆடைகள், காலணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் முழு அளவிலான வாசனை திரவியப் பொருட்கள் அடங்கும். மைக்கேல் கோர்ஸ் கடைகள் உலகின் மிகவும் மதிப்புமிக்க நகரங்களில் இயங்குகின்றன.
கூடுதலாக, மைக்கேல் கோர்ஸ் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் டிஜிட்டல் ஃபிளாக்ஷிப்களை இயக்குகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற பல்வகை அனுபவத்தை வழங்குகிறது.
உலக உணவுத் திட்டம் பற்றி
ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய மனிதாபிமான அமைப்பாகும், இது அவசரகாலங்களில் உயிர்களைக் காப்பாற்றுகிறது மற்றும் மோதல்கள், பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும் மக்களுக்கு அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான பாதையை உருவாக்க உணவு உதவியைப் பயன்படுத்துகிறது.
Follow us on Facebook, Instagram and X, formerly Twitter, via @WFPSriLanka. மேலும் தகவலுக்கு, தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் (மின்னஞ்சல் முகவரி: firstname.lastname@wfp.org): Carol Taylor, WFP, Tel. +94 766 578432

