Oct 29, 2025 - 05:12 PM -
0
என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்தி தொடர்பில் தெளிவூட்டும் விதமாக ஊடக சந்திப்பொன்றை அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
ஊடக சந்திப்பில் அவர் கருத்த தெரிவிக்கையில்,
2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்ததாகக் கூறுவது பொய், அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை.
நான் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த நான், எனக்கு தெரிந்த நண்பரின் ஊடாக National security council unit இற்கு நாங்கள் தகவலை வழங்கி இருந்தோம்.
அதனைத் தொடர்ந்து, ஏமாற்ற முயன்ற 11 பேரையும் கைது செய்தனர்.
இதில் நான் ஒரு ரூபாய் கூட செலவிடவில்லை, இரண்டு சவுதி நண்பர்கள் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள், நான் ஒரு ஆலோசகர் மட்டுமே நான் ஒரு ஆலோசகராகச் சென்றேன், தொழில் வெற்றிகரமாக இருந்தால், எனக்கு ஒரு கமிஷன் கிடைக்கும், இந்த மோசடி விவகாரத்திற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
--

