உலகம்
சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி

Oct 30, 2025 - 01:49 PM -

0

சீனப் பொருட்கள் மீதான வரியை குறைத்த அமெரிக்க ஜனாதிபதி

சீனப் பொருட்களுக்கு எதிராக விதித்த வரியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறைத்துள்ளார். 

தென்கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்- சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தையில் பரஸ்பர வரி விதிப்புகள், அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் சீனா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், சீனப் பொருட்கள் மீதான வரியை டிரம்ப் 10% குறைத்துள்ளார். இதன்மூலம் 57% ஆக இருந்த வரி தற்போது 47% ஆக குறைந்துள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05