விளையாட்டு
சர்வதேச T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள்: பாபர் அசாம் முதலிடம்!

Nov 1, 2025 - 10:59 AM -

0

சர்வதேச T20 போட்டிகளில் அதிக ஓட்டங்கள்: பாபர் அசாம் முதலிடம்!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் அரங்கில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

நேற்று (31) தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் அவர் பெற்ற 11 ஓட்டங்களுடன் இந்தப் பட்டியலில் அவர் முன்னுக்கு வந்துள்ளார். 

இந்த இன்னிங்ஸுடன், பாபர் அசாம் இதுவரை ஆடிய 123 T20 இன்னிங்ஸ்களில் மொத்தம் 4,234 ஓட்டங்களை எடுத்துள்ளார். 

பாபர் அசாமின் இந்த சாதனையில் 3 சதங்கள் மற்றும் 36 அரைச்சதங்கள் அடங்கும். 

ரோஹித் ஷர்மா பாபர் அசாமிற்கு 3 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார். ரோஹித் ஷர்மா 151 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் மற்றும் 32 அரைச்சதங்களுடன் 4,231 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 

விராட் கோலி மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அவர் 117 இன்னிங்ஸ்களில் 4,188 ஓட்டங்கள் பெற்றுள்ளார். 

இந்தப் பட்டியலில் முன்னணியில் உள்ள இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா ஆவார். அவர் 88 இன்னிங்ஸ்களில் 2,276 ஓட்டங்கள் குவித்து 33வது இடத்தில் உள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05