Nov 1, 2025 - 04:32 PM -
0
இந்தியாவின் சிரேஸ்ட டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா (வயது 45) அனைத்துவிதமான டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று (11) அறிவித்துள்ளார்.
அவர், 2002ஆம் ஆண்டில், தன்னுடைய 22 வது வயதில் டென்னிஸில் அறிமுகமாகி ஏறக்குறைய இரு தசாப்தங்களாக டென்னிஸ் ஆடியுள்ளார்.
45 வயதான ரோகன் போபண்ணா கடைசியாக பரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவில் கஸகஸ்தானின் அலெக்ஸாண்டர் பப்ளிக் உடன் இணைந்து விளையாடினார்.
ஆனால், இந்த இணை துரதிர்ஷ்டவசமாக தொடக்கச் சுற்றிலேயே தோல்வியைத் தழுவி வெளியேறியது. இந்நிலையில் போபண்ணா ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையில் இருந்து ஓய்வுபெற்ற போபண்ணா, பரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்குப் பிறகு இந்தியாவிற்கான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில், தற்போது அனைத்து விதமான தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

