Nov 4, 2025 - 07:43 AM -
0
ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் ஜோனதன் ட்ரோட் (Jonathan Trott ) அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண இருபதுக்கு 20 தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகவுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை இதனை உறுதிப்படுத்தி அறிக்கையொன்றையும் வௌியிட்டுள்ளது.
உலகளாவிய கிரிக்கெட்டில் பயிற்சி மாற்றங்கள் இயல்பானதாகும் என்பதை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை ஏற்றுக்கொள்கிறது.
அணிகள் உருவாகுவது போலவே, அவர்களின் தலைமை மற்றும் மூலோபாயத் தேவைகளும் உருவாகின்றன
எந்தவொரு சர்வதேச அணியும் எப்போதும் ஒரே பயிற்சியாளரின் கீழ் இருக்காது, மேலும் நீண்டகால இலக்கை நோக்கி கட்டமைக்கப்படுவதால் இந்த மாற்றம் ஆப்கானிஸ்தானுக்கு ஒரு புதிய அத்தியாயத்தைக் ஏற்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
18 மாத காலப்பகுதிக்கு அவரது பதவி காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும் பின்னர் அது நீடிக்கப்பட்டிருந்தது.
ட்ரோட்டின் பதவிகாலத்தில் 43 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 20 போட்டிகளிலும் 61 சர்வதேச டி-20 போட்டிகளில் 29 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

