உலகம்
நேபாள பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

Nov 4, 2025 - 08:10 AM -

0

 நேபாள பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாளத்தின் பாக்மதி மாகாணம் தோலாக்கா மாவட்டத்தில் உள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் 5 வெளிநாட்டினரும் இரண்டு நேபாள வழிகாட்டிகளும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடங்குவதாக கூறப்படுகின்றது. 

மேலும் நான்கு நேபாள மலையேறிகள் காணாமல் போயுள்ளதாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். 

மோசமான வானிலை, கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பனிப்பொழிவு தணிந்த பின்னர் மீட்பு குழுவினர் மீண்டும் மீட்புப் பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05