Nov 5, 2025 - 08:21 AM -
0
நெஷனல் டெவெலொப்மென்ட் வங்கியானது (NDB) அண்மையில் இலங்கையின் பல புகழ்பெற்ற சீன வாகன உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமீபத்திய மின்சார வாகன (EV) உரிமம் பெற்ற நிறுவனமான கவின்ரோ இன்டர்நெஷனல் (பிரைவேட்) லிமிடெட் [Gavinro International (Pvt) Ltd] உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த மூலோபாய பங்குடைமையானது ,கவின்ரோ இன்டர் நெஷனலின் விரிவான பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் நியாயமான விலையில் லீசிங் [குத்தகை] தீர்வுகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இது தனிப்பயனாக்கப்பட்ட நிதி வசதிகளால் ஆதரிக்கப்படுகிறது.
இந்த பங்குடைமையின் மூலம், NDB வாடிக்கையாளர்கள் Skywell, Skyworth (சீனாவின் Fortune 500 நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை), மற்றும் Keyton போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகநாமங்களை உள்ளடக்கிய சிறப்பான பயணிகள் வாகனங்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும். இதற்கிணங்க NDB வங்கியானது நியாயமான விலை மற்றும் வசதியை மையமாகக் கொண்டு, , குறைந்த ஆவணத் தேவை, நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் தெரிவுகள் மற்றும் உத்தரவாதமளிப்பவர் தேவையின்மை என்பன போன்ற அம்சங்களைக் கொண்ட தனிப்பயன்கொண்டோ லீசிங் தீர்வுகளை வழங்கும். இதன் மூலம் அதிகமான இலங்கையர்கள் கவின்ரோ இன்டர்நெஷனல் நிறுவனத்தின் வாகன வரிசையின் நம்பகத்தன்மையும் தரத்தையும் அனுபவிக்க முடியும்.
இந்தப்பங்குடைமையானது ஸ்கைவெல் மின்சார (EV) வேன்கள், டிரக்குகள் மற்றும் பேருந்துகள் போன்ற பல்வேறு வகையான வர்த்தக வாகனங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள், நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. NDB வங்கியின் வர்த்தக வாகனங்களுக்கான சிறப்பு நிதி திட்டங்கள், வர்த்தகங்களின் பல்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் தொழில்முனைவோரும் நிறுவனங்களும் தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் வளர்ச்சியடையவும் தேவையான நம்பகமான போக்குவரத்து தீர்வுகளைப் பெற முடியும்.
மேலும் இந்த பங்குடைமையானது சுற்றுலா துறையை வலுப்படுத்தும் சிறப்பு முயற்சியாக, Skywell வேன்கள் மற்றும் பேருந்துகளுக்கான மறுநிதியளிப்பு (refinancing) திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தின் மூலம் சுற்றுலா நிறுவனங்கள் ரூ. 2.5 கோடி வரை கடன்களை, வெறும் 7% என்ற மிகப் போட்டித்தன்மையுள்ள வட்டி வீதத்தில் பெற முடியும். இதனால் அவர்கள் நவீனமும் வசதியானதுமான போக்குவரத்து வசதிகளில் முதலீடு செய்து, இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்தவும் பயணிகளின் அனுபவத்தை உயர்த்தவும் முடியும்.
இந்தப்பங்குடைமை தொடர்பாக , NDB வங்கியின் உதவி துணைத் தலைவர் – லீசிங் பிரிவு, திரு. டிலும் அமரசிங்க கருத்து தெரிவிக்கையில் “Gavinro International நிறுவனத்துடனான இந்தப் பங்குடைமையானது , தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் விரிவான மின்சார வாகன நிதி தீர்வுகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியச் சான்றிதழ் பெற்ற உலகத் தரமான வர்த்தகநாமங்களை NDB வங்கியின் நெகிழ்வான, வாடிக்கையாளர் மையக்கோட்டுக் கொண்ட லீசிங் வசதிகளுடன் இணைத்ததன் மூலம், நாம் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு முக்கியமான தொழில் துறைகளுக்கும் ஆதரவளிக்கிறோம்.”
தொழில்துறை முகாமைத்துவம் , சொத்து அபிவிருத்தி, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, மோட்டார் வாகன வர்த்தகம், நிதி மற்றும் திட்ட ஆலோசனை போன்ற துறைகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் Gavinro Investments நிறுவனம், Gavinro International, Gavinro Property Developers மற்றும் Rovinco Global ஆகியவற்றின் முதன்மை நிறுவனமாக உள்ளது. இந்தப்பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், Gavinro International நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அபீத் டங்கல்ல கூறியதாவது; “ DB வங்கியுடனானஇந்தப்பங்குடைமையானது , இலங்கையின் கார்பன் தடத்தை (carbon footprint) குறைக்கும் கவின்ரோ நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். எமது ஒருங்கிணைந்த இலக்கு, நிலைத்தன்மையும் புதுமையும் கொண்ட மின்சார வாகனங்களை அனைவருக்கும் மற்றும் அனைத்து துறைகளுக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதே ஆகும்.”
இந்த ஒத்துழைப்பானது NDB வங்கியின் நிதி தீர்வுகளில் உள்ள நிபுணத்துவத்தையும் நாடு முழுவதும் உள்ள விரிவான அணுகலையும் இணைத்து , இலங்கையெங்கும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக அணுகல் வசதியையும், சுலபத்தன்மையையும், நியாயமான விலையையும் வழங்கும் தளத்தை உருவாக்குகிறது.

