வணிகம்
ஜனசக்தி பைனான்ஸ் IFFSA விருதுகள் வழங்கலில் இஸ்லாமிய நிதியியல் சிறப்புக்காக கௌரவிப்பைப் பெற்றது

Nov 5, 2025 - 08:23 AM -

0

ஜனசக்தி பைனான்ஸ் IFFSA விருதுகள் வழங்கலில் இஸ்லாமிய நிதியியல் சிறப்புக்காக கௌரவிப்பைப் பெற்றது

JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, பிராந்திய மட்டத்தில் பலம் வாய்ந்த கௌரவிப்பை பதிவு செய்யும் வகையில், 10ஆவது தெற்காசிய சர்வதேச இஸ்லாமிய நிதியியல் அமர்வு (IFFSA) விருதுகள் 2025 இல் மெரிட் விருதை சுவீகரித்துள்ளது. “2024/2025 ஆண்டின் சிறந்த இஸ்லாவிய வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவன பிரிவு/அலகு” எனும் போட்டிகரமான பிரிவில் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனூடாக, தெற்காசியாவில் ஜனசக்தியின் மாற்று நிதியியல் வியாபார அலகை மிகவும் போட்டிகரமான மற்றும் தொலைநோக்குடைய இஸ்லாமிய நிதிச் சேவை பிரிவாக நிலைநிறுத்தியுள்ளது. தொழிற்துறையில் வழங்கப்பட்ட கௌரவிப்புக்கு மேலதிகமாக, ஜனசக்தி பைனான்ஸ் கொண்டுள்ள நெறிமையான மற்றும் உள்ளடக்கமான நிதிப் புத்தாக்கம் எனும் நிலைப்பாடும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஷரிஆ விதிமுறைகளை பின்பற்றிய நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் தொலைநோக்குடன், 2021 ஆம் ஆண்டில் AFBU நிறுவப்பட்டதுடன், சகல சமூகங்களுக்கும் நெறிமுறைகளுடனான மற்றும் அசல் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதை நோக்காகக் கொண்டிருந்தது. நம்பிக்கை அடிப்படையிலான நிதிச் சேவைகள் மற்றும் நிஜ உலக நிதி வலுவூட்டல் ஆகியவற்றுக்கிடையிலான இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த அலகு நிறுவப்பட்டது. ஸ்தாபிக்கப்பட்டது முதல், இஸ்லாமிய நிதிக் கொள்கைகளை முறையாக பின்பற்றி, தற்கால நிதித் தேவைகளை துரிதமாக, ஈடுபாட்டுடன் மற்றும் புத்தாக்கங்களை சேர்த்து நிறைவேற்றி, இலங்கையின் நிதிச் சேவைகள் துறையில் பிரத்தியேகமான அடையாளத்தை கட்டியெழுப்பியுள்ளது. 

இஸ்லாமிய நிதிச் சேவைகளில் பிராந்தியத்தின் நன்மதிப்பைப் பெற்ற கட்டமைப்பான IFFSA, இல் விருது வென்றதனூடாக, நிறுவனத்திற்கு மூலோபாய மைல்கல் சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் புகழ்பெற்ற நிறுவனங்களுடன் போட்டியிட்டு, ஜனசக்தி பைனான்ஸ் பெற்றுள்ள இந்த கௌரவிப்பினூடாக, பிராந்திய மட்டத்தில் அதன் உறுதித்தன்மை மற்றும் நற்பெயரை மேம்படுத்தியுள்ளது. இஸ்லாமிய நிதிச் சேவைகளில் இலங்கை வெறுமனே பங்கேற்பது மட்டுமன்றி, அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிகளை வழங்குகிறது என்பதற்கான தெளிவான சமிக்ஞையாகவும் இது அமைந்துள்ளது. 

இந்த வெற்றியின் பின்னணியில், வணிகத் திறமை மற்றும் சமூகப் பொறுப்பு இரண்டையும் பிரதிபலிக்கும் ஒரு தயாரிப்புக் குழுமம் உள்ளது. அவற்றுள், வகாலாஹ் தவணை முதலீடு என்பது வட்டி இல்லாத முதலீட்டுத் திட்டமாக அமைந்துள்ளது. இது நெறிமுறைக் கோட்பாடுகளுடன் கவர்ச்சிகரமான வருமானத்தையும் இணைக்கிறது. வாகன குத்தகை (leasing) பிரிவில், ஜனசக்தி இஜாரா, ஷரியா இணக்கமான குத்தகை மாதிரியை, தனிப்பயனாக்கப்பட்ட வாடகைத் திட்டங்கள் மற்றும் தடையற்ற சேவையுடன் வழங்குகிறது. இதற்கிடையில், ஜனசக்தி இஜாரா Tuk லீசிங் – இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடித் தீர்வாகும் – இது முச்சக்கர வண்டி ஓட்டுநர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய, நெகிழ்வான மற்றும் நெறிமுறையான வாகன நிதி வசதியை வழங்குகிறது. இது நிதி உள்ளடக்கத்தின் மூலம் வாழ்வாதாரத்தையும் கண்ணியத்தையும் சாத்தியமாக்குகிறது. 

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “ஜனசக்தியை பொறுத்தமட்டில் இது ஒரு சாதாரண வெற்றி மட்டுமல்ல. நிதியை நன்மைக்கான ஒரு உத்வேகமாக நம்பும் ஒவ்வொரு தொழில் முயற்சியாளர், சிறு வியாபார உரிமையாளர் மற்றும் சமூக அங்கத்தவருக்கும் கிடைத்த வெற்றியாகும். புத்தாக்கம் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை இது பிரதிபலிப்பதுடன், அவை ஒன்றுடன் ஒன்று பொருந்தும் வகையில் செயற்பட வேண்டும்.” என்றார். 

ஜனசக்தி பைனான்ஸ் செனல்கள் தலைமை அதிகாரி சமிந்த ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “10ஆவது IFFSA விருதுகள் 2025 இல் கௌரவிப்பைப் பெற்றுள்ளதனூடாக, இஸ்லாமிய நிதிச் சேவைகள் துறையில் எமது தலைமைத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தெற்காசியாவின் சகல செயற்பாட்டாளர்களுடனும் போட்டியிட்டுள்ளதனூடாக, எமது நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளமை மாத்திரமன்றி, இந்த வளர்ந்து வரும் துறையில் ஜனசக்தி பைனான்ஸை புத்தாக்கம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டாக திகழச் செய்துள்ளது.” என்றார். 

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் மாற்று நிதி வியாபார அலகு பிரிவின் தலைமை அதிகாரி ஜவ்பர் பரூக் கருத்துத் தெரிவிக்கையில், “2024/2025 ஆண்டின் சிறந்த இஸ்லாவிய வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் நிறுவன பிரிவு/அலகு என்பதற்கான மெரிட் விருதை சுவீகரித்துள்ளமை என்பது, எமது சமூகங்களின் பரந்த தேவைகளை நிவர்த்தி செய்வதில் நாம் வழங்கும் பொருத்தமான நிதித் தீர்வுகளுக்கான அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.” என்றார். 

இந்த அங்கீகாரம், ஆளுகை, வெளிப்படைத்தன்மை மற்றும் நீண்ட கால தாக்கம் ஆகியவற்றை மதிக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கைக்குரிய ஒரு பங்காளியாக JXG (ஜனசக்தி குழுமத்தின்) வர்த்தக நாமத்தை வலுப்படுத்துகிறது. ஓரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்பதிலிருந்து வர்த்தக நாமம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து ஒரு துணிச்சலான மாற்றத்தை செயல்படுத்தியதுடன் மட்டுமல்லாமல், வேகமாக வளர்ந்து வரும் துறையில் ஒரு தனித்துவமான மதிப்புத் திட்டத்தையும் வரையறுத்த ஒரு குழுவின் ஆற்றலை இது எடுத்துக்காட்டுகிறது. IFFSA இலிருந்து கிடைத்த இந்த விருது ஒரு வெற்றிக் கேடயத்தை விட அப்பாற்பட்ட ஒரு அறிக்கை ஆகும். இது, தனது அடிப்படைக் கொள்கைகளின் நேர்மைக்கு எந்தச் சமரசமும் இன்றி, நிதியின் எதிர்காலத்திற்கு ஏற்ப தன்னை மூலோபாய ரீதியாக மறுசீரமைத்துக் கொண்ட ஒரு நிறுவனத்தின் கதையைச் சொல்கிறது. 

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித் தன்மை, வலிமை, தங்கியிருக்கும் திறன் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகும். LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05