Nov 5, 2025 - 08:56 AM -
0
54ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட தடகள சம்பயின்ஷிப் 2025, எம்பிலிபிட்டிய, மஹாவெலி மைதானத்தில் நவம்பர் 3ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த 5500 க்கும் அதிகமான கனிஷ்ட தடகள வீரர்கள் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை பாடசாலைகள் தடகள சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போட்டிகளுக்கு CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட்டின், இலங்கையின் முதல் தர சொக்ல்ட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரி அனுசரணை வழங்கியிருந்தது. இளம் தடகள வீரர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்கான சிறந்த களமாக இந்த சம்பியன்ஷிப் போட்டிகள் அமைந்திருந்ததுடன், நாட்டில் விளையாட்டுகளின் தரத்தை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கியிருந்தது.
நவம்பர் 1 ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நடைபெற்ற இந்தப் போட்டிகளில், பரந்தளவு பந்தயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதில் ஓட்டப் போட்டிகள், அஞ்சல் ஓட்டங்கள், தடை தாண்டி ஓடல், நீளம் பாய்தல் மற்றும் ஜவலின் எறிதல் போன்றன அடங்கியிருந்தன. இவற்றில் போட்டியாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்ததுடன், விளையாட்டுப் பண்புகளையும் பின்பற்றியிருந்தனர். ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ்டெலா கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றதுடன், பெண்கள் பிரிவில், வத்தளை, லைசியம் சர்வதேச பாடசாலை சம்பியன் பட்டத்தை வென்றது.
சிறந்த ஆண் தடகள வீரர் மற்றும் பெண் தடகள வீராங்கனைக்கான விருதுகள் முறையே, பகமூன மஹாசென் தேசிய பாடசாலையின் எம்.ஜி.டி.டபிள்யு. கமகே மற்றும் பன்னிபிட்டிய தர்மபால கல்லூரியின் என்.ஆர் ஏக்கநாயக்க ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
CBL ஃபுட்ஸ் இன்டர்நஷனல் (பிரைவட்) லிமிடெட் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுக்ச பெஸ்டியன்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “13 வருடங்களுக்கு மேலாக சேர் ஜோன் டாபர்ட் தடகள சம்பயின்ஷிப் போட்டிகளுடன் கைகோர்த்துள்ளமை தொடர்பில் ரிட்ஸ்பரி பெருமை கொள்கிறது. இலங்கை பாடசாலைகள் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, அடுத்த தலைமுறை தடகள வீரர்களை ஊக்குவித்து வலுவூட்டும் செயற்பாடுகளில் தனது பங்களிப்பை ரிட்ஸ்பரி வழங்குகிறது. திறமை, ஒழுக்கம் மற்றும் நாட்டின் இளைஞர்களின் இடைவிடாத முயற்சிகளுக்கான கொண்டாட்டமாக இந்த சம்பியன்ஷிப் அமைந்துள்ளது. 900 க்கும் அதிகமான பாடசாலைகள் பங்கேற்றிருந்ததுடன், இது போன்ற கட்டமைப்புகளுக்கு ஆதரவளிப்பதனூடாக, எதிர்கால விளையாட்டு சம்பியன்களை தயார்ப்படுத்துவதில் உதவிகளை வழங்க முடிவதுடன், நாட்டுக்கு நேர்த்தியான வகையில் பங்களிப்பு வழங்கக்கூடிய திறமைசாலிகளை கட்டியெழுப்பக்கூடியதாகவும் இருக்கும்.” என்றார்.
அடுத்த தலைமுறை தடகள வீரர்களை தயார்ப்படுத்துவதில் ரிட்ஸ்பரியின் அர்ப்பணிப்பு பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்படுகின்றன. இளம் திறமையாளர்களை தயார்ப்படுத்துவதில் பல்வேறு கட்டமைப்புகளுக்கு வர்த்தக நாமம் தொடர்ச்சியாக ஆதரவளித்து, இலங்கையின் இளம் விளையாட்டுகளில் முன்னோடி எனும் தனது நிலையை வலிமைப்படுத்தியுள்ளது.

