Nov 5, 2025 - 12:11 PM -
0
இந்தியாவில் உத்தரபிரதேசத்தின் மிசார்பூர் மாவட்டம் சனூரில் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதி 4 பயணிகள் உயிரிழந்தனர்.
ரயில் ஒன்றிலிருந்து இறங்கிய பயணிகளில் சிலர் எதிரே உள்ள நடைமேடைக்கு செல்ல படிகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து நடைமேடையில் ஏற முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், பயணிகள் தண்டவாளத்தை கடந்து கொண்டிருந்த போது அந்த தண்டவாளத்தில் ஹவுரா - கல்கா நேதாஜி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது.
இதில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது ரயில் மோதியது. ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட 4 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து சென்ற ரயில்வே பொலிஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

