Nov 5, 2025 - 12:25 PM -
0
அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி ரிச்சர்ட் புரூஸ் டிக் சேனி தனது 84 ஆவது வயதில் காலமானார்.
இவர் 2001 முதல் 2009ம் ஆண்டு வரை அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயல்பட்டார். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்தபோது இவர் துணை ஜனாதிபதியாக செயல்பட்டார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக டிக் சேனி நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
2003ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்க படையெடுப்பு தொடர்பாக டிக் சேனி பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

