விளையாட்டு
எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து வௌியான முக்கிய தகவல்

Nov 6, 2025 - 02:18 PM -

0

எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து வௌியான முக்கிய தகவல்

ஐ.பி.எல். தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கேற்று வருகிறார் எம்.எஸ்.தோனி. அவர் இல்லாமல் ஐ.பி.எல் தொடரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இல்லை என்றே ரசிகர்கள் கருதுகின்றனர். 

இதனிடையே, 2020-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து எம்.எஸ்.தோனி ஐ.பி.எல். தொடரில் விளையாடுவது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. 

இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவேன் என்று எம்.எஸ்.தோனியும் தெரிவித்து இருந்தார். 

இருப்பினும் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்த வதந்தி பரவி வருகிறது. அதில் ஒன்று, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாட மாட்டார் என்று. 

இந்த நிலையில், 2026 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ்.தோனி விளையாடுவார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் உறுதிபட தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் கூறுகையில், எம்.எஸ். தோனி இன்னும் ஓய்வு பெறவில்லை. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் தொடர்ந்து விளையாடுவார். 

2026 ஐ.பி.எல். சீசனில் அவர் பங்கேற்பார் என்றும் காசி விஸ்வநாதன் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05