செய்திகள்
நாடு முழுவதும் விசேட சோதனை- 23 முக்கிய குற்றவாளிகள் கைது

Nov 6, 2025 - 09:43 PM -

0

நாடு முழுவதும் விசேட சோதனை-  23 முக்கிய குற்றவாளிகள் கைது

பொலிஸாரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நடவடிக்கையின் போது 29,491 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

அதில் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 746 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 224 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அத்துடன், மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் மேலும் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05