Nov 7, 2025 - 09:12 AM -
0
நடிகர் அஜித்குமார் அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கரூர் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார்.
மேலும் கரூர் அசம்பாவிதத்திற்கு விஜய் மட்டும் காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசிய தகவல்கள் சிலரால் விஜய்க்கு எதிரான கருத்து என்பது போல் தகவல் பரபரப்பப்பட்டது. இந்நிலையில் அஜித்குமார் தனது பேட்டி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ஆங்கில ஊடகத்திற்கு நான் கொடுத்த பேட்டி இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு சேர்ப்பதற்கு எதிலாக ஒருசிலரால் அவர்களது அஜென்டாவிற்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது. எனக்கு தெரியும்.
இங்கு எதை எடுத்தாலும் பரபரப்பாக்கத்தான் முயல்வார்கள். ஆனால் நான் நேர்மறையான எண்ணங்களுடன் எனக்கு பிடித்த பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.
ஒரு காலத்தில் சினிமா பத்திரிகையாளர்கள், விளையாட்டு பாத்திரிகையாளார், அரசியல் பத்திரிகையாளர்கள் என தனித்தனியாக இருந்தனர்.
ஆனால் இன்று அரசியல் பத்திரிகையாளர்களை விட ஒரு சில சினிமா பத்திரிகையாளர்களே அரசியல்மயமாகி உள்ளனர்.
என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் சரியாக கொண்டு சேர்க்கப்படவில்லை. மாறாக இதை அஜித்துக்கும், விஜய்க்கும் இடையிலான மோதல். அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான போர் என்பது போல அதை ஆக்கிவிட்டனர்.
என்னுடைய பேட்டியை விஜய்க்கு எதிராக மாற்றி காட்ட முயற்சிக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது. நான் எப்போதும் விஜய்க்கு நல்லதையே நினைத்தும், வாழ்த்தியும் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

