வணிகம்
திருகோணமலையில் ‘இயற்கை ஒளியின் தீபாவளி’ மூலம் இணைந்த குமாரிகா

Nov 7, 2025 - 11:13 AM -

0

திருகோணமலையில் ‘இயற்கை ஒளியின் தீபாவளி’ மூலம் இணைந்த குமாரிகா

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் இயற்கை கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான குமாரிகா (Kumarika), அதன் விசேட “இயற்கை ஒளியின் தீபாவளி” கொண்டாட்டம் நிகழ்வின் மூலம் திருகோணமலையில் தீபாவளியைக் கொண்டாடியது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரம் கோவில் வளாகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, தமிழ் சமூகத்தினரிடையே பண்டிகைக் கொண்டாட்டத்தின் உணர்வை ஏற்படுத்தியதோடு, முழுமையான கூந்தல் பராமரிப்பு மூலம் இயற்கையின் வலுவான ஒளியை பெறுவதற்காக பெண்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதற்கும், அவர்களை வலுவூட்டுவதற்குமான ஒரு அர்த்தமுள்ள சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது. 

இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் 1,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதோடு, அவர்களுக்கு ஏற்ற வகையிலான கூந்தல் பகுப்பாய்வு அமர்வுகளில் பங்கேற்றதுடன், இலவச கூந்தல் அலங்காரம், பூமாலை கட்டும் நடவடிக்கைகளில் கலந்து கொண்டு, பாரம்பரியத்துடன் அழகை இணைத்தனர். அத்துடன் இதனை மறக்க முடியாத நிகழ்வாக அமைக்கும் வகையில், பங்கேற்பாளர்களுக்கு சேலைகள், அணிகலன்கள், குடைகள், குமாரிகா பொதிகள் உள்ளிட்ட கலாசார ரீதியான அன்பளிப்புகளும் வழங்கப்பட்டன. இது அவர்களின் தீபாவளிக் கொண்டாட்டங்களுக்கான அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் சேர்த்தது. 

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, 'உண்மையான அழகு இயற்கையானது' எனும் செய்தி அமைந்திருந்தது. பல தசாப்தங்களாக குமாரிகாவின் மையக் கருத்தாக இது இருந்து வருகிறது. குமாரிகாவின் 100% இயற்கைச் சாறுகள் நிறைந்த கூந்தல் எண்ணெய், ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றை கொண்ட முழுமையான கூந்தல் பராமரிப்பு பாரம்பரியத்தை பின்பற்றுமாறு, இவ்வர்த்தகநாமம் பெண்களை ஊக்குவித்து வருகிறது. அதன் நம்பகமான தயாரிப்புகள், கூந்தலின் வேரிலிருந்து நுனி வரை போசணையை வழங்குவதுடன், இரு மடங்கு பலனையும் வேகமான இறுதி முடிவுகளையும் வழங்குகிறது. 

Hemas FMCG கூந்தல் பராமரிப்பு பிரிவு தலைவி திருமதி ஹிருஷி பெனாண்டோ தெரிவிக்கையில், “உண்மையான அழகு இயற்கையிலிருந்தும் நாம் மேற்கொள்ளும் முழுமையான கூந்தல் பராமரிப்பு நடவடிக்கைகளில் இருந்தும் ஆரம்பிக்கிறது என குமாரிகா ஆகிய நாம் நம்புகிறோம். எமது ‘இயற்கை ஒளியின் தீபாவளி’ நிகழ்வின் மூலம், இந்தத் தீபாவளியில் தீப ஒளியின் பண்டிகையை மாத்திரமல்லாமல், ஒவ்வொரு பெண்ணின் உள்ளத்தின் ஒளியையும் தன்னம்பிக்கையையும் நாம் கொண்டாடினோம். எப்போதும் இயற்கை அழகு மற்றும் பெண்களை வலுவூட்டும் நடவடிக்கைகளுக்காக குமாரிகா முன்னிற்கிறது. திருகோணமலையில் உள்ள தமிழ் மக்களுடன் இந்தப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டதில் நாம் பெருமை அடைகிறோம்.” என்றார். 

இந்தக் கொண்டாட்டம் மூலம், இயற்கை பராமரிப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு வர்த்தக நாமம் எனும் தனது பாரம்பரியத்தை குமாரிகா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வர்த்தக நாமம் 30 ஆண்டுகளாக ‘இயற்கை அழகு’ இன் அடையாளமாக நிலைத்து நிற்கிறது. அத்துடன், நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு இயற்கையின் சக்தியின் மூலம் தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை அடைவதற்கு உத்வேகம் அளிக்கிறது. திருகோணமலையில் செயற்படுத்தப்பட்ட இந்த நிகழ்வானது, கலாசாரத்தை முழுமையான கூந்தல் பராமரிப்புடன் இணைத்து, அந்த வாக்குறுதியின் தெளிவான வெளிப்பாடாக அமைந்தது. 

நூற்றுக்கணக்கான பெண்கள், முழுமையான கூந்தல் பராமரிப்பு அனுபவங்கள், தயாரிப்பு பற்றிய விளக்கங்கள் மற்றும் சிகை அலங்காரம் செய்யும் அமர்வுகளில் பங்கேற்றதன் மூலம், இந்நிகழ்வானது வலுவான பங்கேற்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தியிருந்தது. இது ஒரு அர்த்தமுள்ள டிஜிட்டல் வெளிப்படுத்தலை ஏற்படுத்தியதன் மூலம், நிகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு அப்பால் இயற்கை அழகின் கொண்டாட்டத்தை பரவலடையச் செய்தது. 

“இயற்கை ஒளியின் தீபாவளி” நிகழ்வானது திருகோணமலை பெண்களுக்கு மறக்க முடியாத ஒரு கொண்டாட்டமாக அமைந்திருந்தது. இது பாரம்பரியம், முழுமையான கூந்தல் பராமரிப்பு, இயற்கை அழகு ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று சிறப்பாக இணைந்த ஒரு தருணமாகும். இதன் மூலம் அனைத்து பிரதேசங்களிலும் உள்ள பெண்களையும் வலுவூட்டுவதற்கும், நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதற்குமான கலங்கரை விளக்கமாக குமாரிகா மீண்டுமொரு முறை தன்னை நிலை நிறுத்தியுள்ளது. 

Hemas Consumer பற்றி 

60 வருடங்களாக வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, குடும்பங்கள் சிறந்த எதிர்காலத்தை அனுபவிப்பதனை வலுவூட்டுவதில் கவனம் செலுத்துகிறது. வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட முன்மொழிவுகளில் புத்தாக்கத்தை ஏற்படுத்தவும், மேம்படுத்தவும் உள்ளூர் தகவல் தரவுகளைப் பயன்படுத்துவதில் பெருமை கொள்வதோடு, இது இலங்கையில் நம்பகமான வீட்டுப் பெயர் வர்த்தக நாமமாக தன்னை நிறுவுதல் எனும் அவர்களது நோக்கத்தை அடைய உதவுகின்றது. இலங்கையின் நுகர்வோர் பற்றிய ஆழமான புரிதல் மற்றும் அதன் தயாரிப்புகளில் உயர் தரம் மற்றும் பெறுமதியை வழங்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பினால் உந்தப்பட்டுள்ள Hemas Consumer Brands, நாடு முழுவதும் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை தொடர்ச்சியாக வளப்படுத்துகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05