Dec 7, 2025 - 06:50 PM -
0
பேராதனை மற்றும் சரசவி உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
'களு பாலம்' என அழைக்கப்படும் இப்பாலத்திற்கு, சீரற்ற வானிலையுடன் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பாலத்தைத் திருத்தியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ள போதிலும், நாளை அது தொடர்பில் சரியான முடிவை எடுக்க முடியும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்தார்.
"திங்கட்கிழமை முதல் பாலத்தின் சாய்ந்துள்ள பகுதியை எவ்வகையில் புனரமைக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க எதிர்பார்க்கிறோம். அதற்கமையவே திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அநேகமாக ஒரு புதிய பாலமாகவே அமைத்து முன்செல்ல நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இதனை இரட்டைப் பாதையாக நிர்மாணிக்கவே நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஏனெனில், இந்தப் பாலத்தைத் தற்காலிகமாகப் பராமரிப்பது அவ்வளவு பொருத்தமானதாக இல்லாத நிலையிலேயே உள்ளது." என்றார்.

