Dec 7, 2025 - 11:56 PM -
0
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் இன்று (07) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் BQ 2 தளத்தில் பொறுப்பேற்கப்பட்டன.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

