Dec 11, 2025 - 01:37 PM -
0
இலங்கையின் பல மாவட்டங்கள் மோசமான வெள்ள அனர்த்தம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், மக்களுக்கு தமது ஆதரவை வழங்க VFS Global முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையுடனான அதன் நீண்ட கால பங்காண்மையை பிரதிபலித்து, வெளிவிவகார அமைச்சினால் அவசர நிவாரண மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும் வகையில் நிறுவப்பட்டுள்ள அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வெள்ள நிவாரண நிதியத்துக்கு பங்களிப்பு வழங்கியுள்ளது.
அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தம்மை மீளக் கட்டியெழுப்பிக் கொள்வதற்கு உதவும் வகையில், தற்காலிக குடியிருப்புகள், மருந்துப் பொருட்கள் மற்றும் பண்டத் தேவைகள் போன்றன அடங்கலாக அத்தியாவசிய வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கு இந்தப் பங்களிப்பு உதவிகளை வழங்கும்.
2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் VFS Global செயலாற்றுவதுடன், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்நாட்டவர்களை பணியில் அமர்த்தியுள்ளது. நிறுவனத்தின் கூட்டாண்மை தன்னார்வ நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, ஊழியர்கள் தொடர்ச்சியாக சமூக அபிவிருத்திப் பணிகளில் தன்னார்வ அடிப்படையில் பங்கேற்று, நிறுவனம் இயங்கும் சமூகங்களின் பரந்த நோக்கான அர்த்தமுள்ள, நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவது என்பதை பிரதிபலிக்கும் வகையில் இயங்குகின்றனர்.
நிவாரண செயற்பாடுகளின் அங்கமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதற்காக ஊழியர்கள் ஒன்றிணைந்திருந்தனர். அதனூடாக, அவசர தேவைகளின் போது VFS Global இன் சமூக-மையப்படுத்தப்பட்ட ஆதரவுச் செயற்பாடுகளுக்கு மேலும் வலிமையூட்டியிருந்தனர்.
தெற்காசிய பிராந்தியத்திற்கான பிரதம செயற்பாட்டு அதிகாரி “யும்மி தல்வார்” கருத்துத் தெரிவிக்கையில், “கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள குடும்பத்தாருக்கு எமது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டின் நீண்ட கால பங்காளர் எனும் வகையில், இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் இலங்கை மக்களுடன் நாம் இணைந்துள்ளோம். அரவணைப்பு மற்றும் எமது ஆதரவு அதிகளவில் தேவைப்படும் சந்தர்ப்பத்தில் ஈடுபாடு மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றுடன் அவர்களை சென்றடைவதற்கான எமது அர்ப்பணிப்பு இதனூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.”
என்றார். VFS Global தற்போது இலங்கையில் 24 வாடிக்கையாளர் அரசுகள் சார்பாக ஆதரவளித்து, நாடு முழுவதிலும் பயணம் செய்வோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நடமாட்டத் தேவைகளை நிவர்த்தி செய்ய பங்களிப்பு வழங்குகிறது.
VFS Global பற்றி
நம்பகமான தொழில்நுட்பச் சேவைகளில் உலகளாவிய முன்னோடியாக, அரசுகள் மற்றும் குடிமக்களுக்கான பாதுகாப்பான நடமாட்டத்திற்கு (Secure Mobility) வலுவூட்டும் VFS Global நிறுவனம், உலகெங்கிலும் உள்ள அரசுகள் மற்றும் தூதரகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக உருவாக்கும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) உள்ளிட்ட தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஏற்றுக்கொள்கிறது. வீசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரகச் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான நீதிசாராத மற்றும் நிர்வாகப் பணிகளை இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர் அரசுகளுக்காக நிர்வகிக்கிறது. இதன் மூலம் உற்பத்தித்திறனை அதிகரித்து, மதிப்பீடு செய்யும் முக்கியமான பணியில் முழுமையாக கவனம் செலுத்த அவர்களுக்கு உதவுகிறது.
தொழில்நுட்ப மேம்பாடு, அதை ஏற்றுக்கொள்வது மற்றும் ஒருங்கிணைப்பதில் பொறுப்பான அணுகுமுறையுடன், இந்நிறுவனம் 70 வாடிக்கையாளர் அரசுகளுக்கு நம்பகமான பங்காளியாகச் சேவை செய்யும் அதே வேளையில், நெறிமுறை நடைமுறைகள் மற்றும் நிலையான தன்மையையும் முதன்மையளிக்கிறது. 165 நாடுகளில் 3,900க்கும் மேற்பட்ட விண்ணப்ப மையங்களை இயக்கி வரும் VFS Global, 2001 ஆம் ஆண்டு முதல் 519 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் (Transactions) சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளது.
சூரிச் (Zurich) மற்றும் துபாயைத் (Dubai) தலைமையிடமாகக் கொண்டுள்ள VFS Global இன் முதலீட்டு நிதியின் பெரும்பான்மையை Blackstone Inc சொந்தமாகக்கொண்டுள்ளது. அத்துடன் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Kuoni and Hugentobler Foundation உள்ளிட்ட சிறுபான்மை பங்குதாரர்களையும் கொண்டுள்ளது.
* இது VFS Global மூலம் 327 மில்லியன் பரிவர்த்தனைகள் மற்றும் CiX Citizen Experience மூலம் 192 மில்லியன் பரிவர்த்தனைகளையும் உள்ளடக்கியுள்ளது.
ஊடக தொடர்புகளுக்கு
Ria Vaidya
RiaV@vfsGlobal.com
communications@vfsGlobal.com

