Dec 11, 2025 - 01:40 PM -
0
இலங்கையின் மின்சார வாகனத் துறையில் முக்கியமான ஒரு மைல்கல்லாக, Leapmotor நிறுவனத்தின் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளரும் விநியோகஸ்தருமான Carmart (Pvt) Ltd நிறுவனம், இவ்வாரம் அதிநவீன Leapmotor C10 Self-Charging மின்சார வாகனங்களின் முதல் தொகுதியை மகிழ்ச்சியுடன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தது.
இந்நிகழ்வு, நாட்டின் முதல் REEV (Range-Extended Electric Vehicle) SUV வாகனமான Leapmotor C10 Self-Charging மின்சார வாகனத்தினை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது. இது முழு மின்சார வாகனத்தின் சிக்கனத்தன்மை மற்றும் மின்னேற்றங்களுக்கு இடையில் வரம்பற்ற தூரத்தின் நெகிழ்வுத்தன்மையுடன் மேம்பட்ட பாதுகாப்பு அமைப்பு மற்றும் விதிவிலக்கான வசதிகளை கொண்டது. அதன் நேர்த்தியான வடிவமைப்பு, ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் 1,150 km வரையிலான ஈர்க்கக்கூடிய இணைந்த தூரம் (NEDC) ஆகியவற்றுடன், C10 வசதியை மறுவரையறை செய்யும் வகையில், தொலைவெல்லை அச்சத்தை நீக்கி தடையற்ற, நவீன மின்சார வாகனம் செலுத்தும் அனுபவத்தை வழங்குகிறது.
கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள Carmart நிறுவனத்தின் காட்சி அறையில் நடைபெற்ற இக்கையளிக்கும் நிகழ்வு, வாகன கையளிக்கும் நிகழ்வாக மட்டுமல்லாது, புதிய Leapmotor C10 உரிமையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவமாக அமைந்தது. Carmart நிறுவனத்தின் உயரதிகாரிகள் முதல் வாடிக்கையாளர்களை நேரில் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.
அவர்கள் C10 இனை “தொழில்நுட்பம், வசதி மற்றும் நடைமுறைத்தன்மையின் பரிபூரண கலவை” என்று வர்ணித்தனர். Carmart நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. யசேந்திர அமரசிங்க அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: “இன்று இலங்கையின் நடைமுறை மின்சார போக்குவரத்து பயணத்தில் முக்கியமான ஒரு படியை குறிக்கிறது. Leapmotor C10 மின்சார வாகனம் மட்டுமல்லாது, இது ஸ்மார்ட்டான, திறமையான வாகனம் செலுத்துவதற்கான வழியை பிரதிபலிக்கிறது. புதுமையை உண்மையாகப் பாராட்டும் முன்னோடி வாடிக்கையாளர்களுக்கு இதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டார்.
இலங்கையில் மின்சார போக்குவரத்தின் மீதான ஆர்வம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், Leapmotor C10 அதன் நேர்த்தியான வடிவமைப்பு, Maserati பொறியியலாளர்களால் டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் உள்ளிட்ட அறிவார்ந்த பொறியியல் தீர்வுகள் மற்றும் விதிவிலக்கான வசதி ஆகியவற்றால் தனித்து நிற்கிறது.
ஐரோப்பாவின் இரண்டாவது பாரிய கார் உற்பத்தியாளரான Stellantis நிறுவனத்தின் ஆதரவுடனும், Carmart நிறுவனத்தின் 75 ஆண்டுகால நம்பிக்கை, வாடிக்கையாளர் மையப்படுத்தல் மற்றும் வலுவான விற்பனைக்கு பிந்திய சேவைகளுடன், Leapmotor உயர்தர நவீன போக்குவரத்தையும் சிறந்த மதிப்பையும் எதிர்பார்க்கும் இலங்கை சாரதிகளுக்கு மிகவும் ஈர்க்கக்கூடிய தெரிவாக மாறவுள்ளது.
எதிர்கால உற்பத்திகள் விரைவாக விற்பனையாகி வரும் நிலையில், நம்பிக்கை, புதுமை மற்றும் வசதியான அன்றாட மின்சார வாகன செலுத்துதலில் எதிர்காலத்தின் அடையாளமாக, Leapmotor C10 இலங்கையின் வாகனத் துறையில் வலுவான தடத்தைப் பதிவு செய்யத் தயாராக உள்ளது.

