வணிகம்
INSEE லங்கா தித்வா புயலுக்கு பின்னர் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவு வழங்குகிறது

Dec 11, 2025 - 04:02 PM -

0

INSEE லங்கா தித்வா புயலுக்கு பின்னர் வீடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ஆதரவு வழங்குகிறது

தித்வா புயல் ஆனது இலங்கையின் பல மாவட்டங்களில் பாரிய அழிவை ஏற்படுத்தி பல வீடுகளை கடுமையாக சேதப்படுத்தி குடும்பங்களை இடம்பெயர வைத்துள்ளது. நாட்டை மீள்கட்டியெழுப்பும் சவாலுக்கு முகம் கொடுக்கும் வகையில், பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான வீடுகளை மீண்டும் கட்ட உதவுவதற்காக ‘ජාතිය ගොඩනගන ශක්තියේ සත්කාරය’ திட்டத்தின் கீழ் 20,000 INSEE சங்ஸ்தா சீமெந்து பொதிகளை நன்கொடையாக வழங்க INSEE லங்கா முன்வந்துள்ளது. நெருக்கடியான காலங்களில் இலங்கையர்களை ஆதரிப்பதிலும் நீண்டகால நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் INSEE இன் ஆழ்ந்த அர்ப்பணிப்பை இம் முயற்சி நிரூபிக்கிறது. 

இந் நன்கொடையின் அடையாள கையளிப்பு நிகழ்வு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் சுசில் ரணசிங்ஹ ஆகியோர் முன்னிலையில் இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்றது. INSEE லங்காவை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர்/பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தன ஏகநாயக்க மற்றும் Channel மேம்பாடு மற்றும் வெளிவிவகாரப் பிரிவின் பொது முகாமையாளர் சந்தன நாணயக்கார ஆகியோர் கலந்து கொண்டமை சமூக ஆதரவு மற்றும் நிலைபேறான வளர்ச்சியில் நிறுவன தலைமைத்துவத்தின் ஈடுபாட்டை பிரதிபலித்தது. 

புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் நன்கொடையாக வழங்கப்பட்ட சீமெந்து புத்தளம், குருநாகல், கண்டி, மாத்தளை மற்றும் பதுளை மாவட்ட செயலாளர்கள் (GAs) மூலம் விநியோகிக்கப்படும். வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் பெரும் துயருக்கு இலக்கான குடும்பங்களுக்கு கண்ணியம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க INSEE லங்கா உதவுகிறது. 

தேசத்தை கட்டியெழுப்புவதில் INSEE லங்காவின் பங்கை மீண்டும் இம் முயற்சி உறுதிப்படுத்துகிறது. அரச அதிகாரிகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடனான இணைவு ஊடாக INSEE தொடர்ந்து இலங்கையில் வலுவான எதிர்காலத்திற்கான நம்பிக்கையை உருவாக்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05