Dec 12, 2025 - 06:53 AM -
0
மியன்மாரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது வைத்தியசாலையை குறிவைத்து ஆளும் மியன்மார் இராணுவத்தின் போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
வைத்தியசாலை மீது நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் வைத்தியசாலையின் கட்டடங்கள், வாகனங்களும் கடும் சேதமடைந்தன.
வைத்தியசாலை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

