Dec 12, 2025 - 03:26 PM -
0
வெனிசுலாவின் ஆறு எண்ணெய் கப்பல்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் உறவினர்கள் மற்றும் சில வர்த்தக நிறுவனங்களுக்கும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெனிசுலாவின் கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்றை நேற்றைய தினமும் அமெரிக்கா கைப்பற்றியிருந்தது.
கைப்பற்றப்பட்ட கப்பலின் கெப்டன் "சட்டவிரோத எண்ணெய் கப்பலேற்றத்தில்" ஈடுபட்டுள்ளதாகவும், குறித்த கப்பல் அமெரிக்கத் துறைமுகமொன்றுக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் கரோலின் லெவிட் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

