Dec 13, 2025 - 05:45 PM -
0
கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 திகதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
இன்று நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான UDF அதிக இடங்களில் முன்னிலை பெற்று காணப்படுகிறது.
அதே சமயம் கேரளாவில் பெரிய செல்வாக்கு இல்லாத பாஜக இந்த தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், கேரள உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில் பிரதமர் மோடி பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக- என்டிஏ கூட்டணி வெற்றி கேரள அரசியலில் ஒரு திருப்புமுனை தருணம். கேரள மாநில மக்களின் விருப்பம், வளர்ச்சியை எங்களால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
திருவனந்தபுரம் போன்ற துடிப்பான நகரத்தின் வளர்ச்சியை நோக்கி எங்கள் கட்சி பாடுபடும் என தெரிவித்துள்ளார்.

