சினிமா
சூர்யாவின் கருப்பு படம் வௌியாவதில் தாமதம்

Dec 13, 2025 - 05:50 PM -

0

 சூர்யாவின் கருப்பு படம் வௌியாவதில் தாமதம்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. 

அவருடன் திரிஷா, நட்டி நடராஜ், லப்பர் பந்து சுவாசிகா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். 

இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கும் தனது 46வது படத்தை முடிக்கப் போகும் சூர்யா, அடுத்து மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47-வது படத்தில் நடிக்கப் போகிறார். 

எனினும் கருப்பு படத்தின் ரிலீஸ் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதோடு இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் திருப்தி இல்லாததால் மீண்டும் சூர்யாவிடத்தில் கால்சீட் வாங்கி சில நாட்கள் படப்பிடிப்பை நடத்திய ஆர்.ஜே.பாலாஜி தற்போது அது குறித்து இறுதி கட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

பொங்கலுக்கு ஜனநாயகன், பராசக்தி படங்கள் ரிலீஸ் ஆவதால் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

விஎப்எக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில்தான் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05