பல்சுவை
ஓரினச்சேர்க்கை.. சித்திரவதை அனுபவித்த மாணவன்!

Dec 15, 2025 - 12:10 PM -

0

ஓரினச்சேர்க்கை.. சித்திரவதை அனுபவித்த மாணவன்!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி சாலையில் அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயலப்பட்டு வருகிறது. 

இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி, விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகிலுள்ள அரசு பள்ளியில் படித்தும் வருகின்றனர். 

இந்நிலையில் இந்த விடுதியில் தங்கி படிக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள், 10வது மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 4 பேர் சேர்ந்து கடந்த சில மாதங்களாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

மேலும் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி உள்ளனர். நாளுக்கு நாள் மாணவர்களின் சித்திரவதை அதிகரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன் வேறு வழியில்லாமல் தனது பெற்றோரிடம் கதறிய படி கூறியுள்ளார். இதையடுத்து மாணவனின் பெற்றோர், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் புகார் அளித்தனர். 

இதன் பேரில், மாணவனை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்திய நான்கு மாணவர்களும் விடுதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின்பேரில் தஞ்சை அனைத்து மகளிர் பொலிஸ் குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன் நேற்று முன்தினம் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், நான்கு மாணவர்களையும் பொலிஸார் அழைத்து விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் உண்மை என்று தெரிய வந்தது. 

இதையடுத்து நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து திருச்சி சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05