Dec 16, 2025 - 11:45 AM -
0
ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனம் நிர்மாணித்து வரும் முக்கியமான புறநகர் சமூகக் குடியிருப்புத் திட்டமான VIMAN Ja-Ela இன் 4வது மற்றும் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இந்த சிறப்புமிக்க குடியிருப்புத் திட்டத்தில் குடியிருப்பாளராக மாற விரும்பு வோருக்கான இறுதி வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
முந்தைய கட்டங்களுக்கு காணப்பட்ட வலுவான கேள்வியைத் தொடர்ந் து, திட்டத்தின் இறுதிக் கட்டமாக அமைந்துள்ள 4வது கட்டத்தின் விற்ப னை நடவடிக்கைகள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆரம்பம் முதலே VIMAN Ja-Ela, வெறும் இல்லங்களை வழங்கும் ஒரு திட்டமாக அல்லாது, முழுமையான வாழ்க்கைமுறை அனுபவத் தை வழங்கும் குடியிருப்புச் சூழலாக தன்னை நிலைநாட்டி வருகிறது. பாதுகாப்பும் திட்டமிடப்பட்ட வடிவமைப்பும் இணைந்த சூழ லில், வசதி, எளிதான போக்குவரத்து அணுகல் மற்றும் நவீன புறநகர் வாழ்க்கைமுறைக்கு ஏற்ற அமைப்பு ஆகியவற்றை ஒருங்கே கொண்டதாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 4வது கட்டத்தின் விற்பனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில், ஏற்கனவே உருவா கியுள்ள வளமான அயல்சூழலில் இணைந்து கொள்ள விரும்பும் வீடு கொள்வனவு செய்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
4வது கட்டத்தின் கீழ், திறந்த மற்றும் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளக்கூடிய உட்புற வடிவமைப்புக ளுடன், தாராளமான இயற்கை வெளிச்சத்தை பெற்ற இரண்டு மற்றும் மூன்று படுக்கை அறைகள் கொண்ட இல்லங்கள் வழங்கப்படுகின்றன. அழகிய பூந்தோட்டங்கள் மற்றும் விசாலமான பசுமையான திறந்த வெளிகளை நோக்கிய காட்சிகளை குடியிருப்பாளர்கள் அனுபவிக்க முடியும். இதனுடன், கிளப் ஹவுஸ், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், நடைபாதைகள் மற்றும் சைக்கிள் ஓட்டப் பாதைகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பகுதிகள், பல்நோக்கு விளையாட்டுத் திடல்கள், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள், விருந்தினர்களுக்கான தனிப்பட்ட வாகனத் தரிப்பிட வச திகள் உள்ளிட்ட விரிவான வாழ்க்கைமுறை வசதிகளும் இதில் அடங்கும்.
மொத்த நிலப்பரப்பின் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பகுதி திறந்த வெளிகள் மற்றும் பொது வசதிகளுக்காக ஒதுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ள VIMAN Ja-Ela, ஆரோக்கியமானதும் சமூகத்தை மையமாகக் கொண்டதுமான வாழ் க்கைமுறையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
இத்திட்டத்தின் 4வது கட்டம் குறித்து கருத்து தெரிவித்த ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனத்தின் துறைத் தலைவர் இனோக பெரேரா அவர்கள், “VIMAN Ja- Ela பயணத்தின் இறுதி அத்தியாயமே இந்த 4வது கட்டம். இன்று நாம் வழங்குவது வெறும் ஒரு வீடு அல்ல; வசதி, நடைமுறை மற்றும் சமூக உறவு ஆகியவற்றை சமநிலையில் பேணும் ஒரு வாழ்க்கைமுறை அனுபவமா கும். நிலைத்தன்மை மற்றும் நீண்டகால மதிப்பை முன்னிலைப்படுத்தி, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்ப ட்ட ஒரு அமைவிடத்தில், வரவேற்புமிக்க மற்றும் இணைந்த சூழலில், நவீன வாழ்க்கைமுறைக்கு ஏற்ற வகையில் VIMAN Ja-Ela முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது,” எனக் குறிப்பிட்டார்.
கொழும்பு நகரத்திற்கும் பிரதான போக்குவரத்து இணைப்புகளுக்கும் எளிதான அணுகலை வழங்கும் கேந் திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள VIMAN Ja- Ela, அமைதியான புறநகர் வாழ்க்கையையும் நகர்ப்புற வசதிகளையும் சமநிலையாக ஒரு ங்கிணைக்கிறது. நவீனமும் சிறப்பாக நிறுவப்பட்ட குடியிருப்பு முகவரி யையும் நாடும் புதிய வீட்டு உரிமையாளர்களுக்கான வாக்குறுதியை 4வது கட்டம் நிறைவேற் றுகிறது.
குறைந்த எண்ணிக்கையிலான இல்லங்களே இக்கட்டத்தில் திட்டமிடப் பட்டுள்ளதால், முன்பே பதிவு செய்பவர்களுக்கே இந்த வாய்ப்புகள் கிடை க்கும். VIMAN Ja-Ela – 4வது கட்டம் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.viman.lk என்ற இ ணையத்தளத்தைப் பார்வையிடுங்கள் அல்லது 0706 068 068 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் ஜோன் கீல்ஸ் புராப்பர்டீஸ் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

