Dec 16, 2025 - 11:58 AM -
0
இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது, நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களை (SME) வலுவூட்டும் முயற்சிகளுக்கான தனது அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, நவீன விவசாய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இலங்கை விவசாயிகளும், விவசாய தொழில் முயற்சியாளர்களும் எளிதில் அணுகும் பொருட்டு Brown & Company PLC நிறுவனத்துடன் மூலோபாய பங்குடைமையொன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப்பங்குடைமையானது, நாட்டின் விவசாயத் துறையின் நவீனமயத்தை முன்னெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு லீசிங் வசதிகளையும் உள்ளடக்கியதாகும்.இந்த ஒத்துழைப்பை அதிகாரப்பூர்வமாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), இரு நிறுவனங்களுக்கிடையேயான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதோடு, விவசாயத் துறையில் இயந்திரமயமாக்கல், உற்பத்தித் திறன் மற்றும் தன்னிறைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கொமர்ஷல் வங்கியானது தனது Agri Lease மற்றும் திரிபல பசுமை அபிவிருத்திக்கடன் (Diribala Green Development Loan Scheme) திட்டங்கள் ஊடாக Browns Agriculture நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்படும் விவசாய வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், பாதுகாக்கப்பட்ட விவசாய மற்றும் பாசன அமைப்புகள், அறுவடைபிந்தைய இயந்திரங்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கான சிறப்பு லீசிங் வசதிகளை வழங்கும். Browns Agriculture, நிறுவனமானது இந்த ஊக்குவிப்புத்திட்டத்தின் கீழ் உபகரணங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு பல்வேறு பிரத்தியேக நன்மைகளை வழங்கும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2-சக்கர டிராக்டர் வகைகளுக்கு இலவச முதல் ஆண்டு காப்புறுதி, அனைத்து டிராக்டர்களுக்கும் முதல் நான்கு சுய உழைப்பு இல்லாத சேவை, Yanmar மற்றும் Sumo அறுவடை இயந்திரங்களுக்கு முதல் மூன்று சுய உழைப்பு இல்லாத சேவைகள், மேலும் SUMO தானியங்கி அரிசி அரைப்பான் இயந்திரங்களுக்கு இலவச முதல் ஆண்டு IoT அடிப்படையிலான தொலைநிலை கண்காணிப்பு மற்றும் உபகரண கண்காணிப்பு தளம் ஆகியவை அடங்கும்.
Agri Lease மற்றும் Diribala Green Development Loan Scheme திட்டங்கள் ஊடாக சுற்றுச்சூழலுடன் நட்புறவான விவசாய இயந்திரங்களுக்கான அணுகலை எளிதாக்குதல், தக்க வளர்ச்சியுள்ள விவசாய முறைகளை மேம்படுத்தும் வங்கியின் அர்ப்பணிப்புடன் இணங்குகிறது என்று கொமர்ஷல் வங்கி தெரிவித்துள்ளது. இந்த முயற்சியானது புதுமை மற்றும் காலநிலைத் தாங்குதிறனை ஆதரிப்பதுடன், கிராமப்புற வாடிக்கையாளர்களுடன் வங்கியின் உறவை வலுப்படுத்தி, தேசிய உணவு பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது என்றும் வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

