சினிமா
காதலுக்காக சூனியம் செய்த நடிகை

Dec 16, 2025 - 12:43 PM -

0

காதலுக்காக சூனியம் செய்த நடிகை

ஹிந்தி தொலைக்காட்சி தொடர்கள், பொலிவுட் படங்கள், வெப் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை திவ்யங்கா திரிபாதி. 

முன்னதாக திவ்யங்கா, நடிகர் சரத் மல்கோத்ராவை காதலித்தார். 

இருவரும் 8 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 

ஆனாலும் சரத் மீது திவ்யங்கா தீவிர காதலில் இருந்ததால் அவரை மீண்டும் தமது வாழ்க்கைக்குள் கொண்டு வர தயாராக இருந்தார். 

இந்நிலையில் தனது காதல் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- காதலைக் காப்பாற்றவும், சரத்தை மீண்டும் தனது வாழ்க்கைக்குள் கொண்டு வரவும் சூனியத்தை நாடினேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். 

அதன்பின் இவர், 'ஏ ஹை மொஹப்பத்தைன்' என்ற இந்தி சீரியலில் தன்னுடன் சேர்ந்து நடித்த விவேக் தாஹியாவை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05