Dec 16, 2025 - 01:15 PM -
0
கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக ஹிட் கொடுத்த பிரதீப், அடுத்து லவ் டுடே மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதனை தொடர்ந்து 'டிராகன், டியூட்' என அடுத்தடுத்த படங்களிலும் ரூ.100 கோடி வசூல் செய்தார்.
இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ''லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி செட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் எதிர்வரும் 18ம் திகதி வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து பிரபல தாயரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின் மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ளர்.
இந்த படம் தொடர்பான அப்டேட்டை தயாரிப்பாளர் அர்சனா கல்பாத்தி கொடுத்துள்ளார்.
அதாவது, பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தில் தானே நடித்து இயக்கப் போகிறார்.
நாங்கள் தயாரிக்கும் இந்த படம் மிகவும் விறுவிறுப்பானதாக இருக்கும்.
மேலும், இந்த படத்திற்கான படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து படத்தை வெளியிடும் திட்டமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

