Dec 16, 2025 - 01:20 PM -
0
1999 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட்டான திரைப்படம் படையப்பா. இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் இப்படத்தை இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
மேலும் சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா, மணிவண்ணன், ராதாரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
கடந்த வாரம் ரீ ரிலீஸான படையப்பா படத்தை திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வெளிவந்து வைரலானது.
இந்த நிலையில் ரீ ரிலீஸில் இப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, படையப்பா படம் ரீ ரிலீஸில் இதுவரை ரூபா 15.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

