Dec 16, 2025 - 07:33 PM -
0
தேசிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பிரமோதய விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பின்வருமாறு,
இந்திக டி சேரம் (Indika de Saram)
தரங்க பரணவிதான (Tharanga Paranavitana)
வினோதன் ஜோன் (Vinothen John)
ரசாஞ்சலி டி அல்விஸ் (Rasanjali de Alwis)
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுத்துறைச் சட்டத்தின் 39-1 பிரிவின் பிரகாரமும், 2025 மே 21 ஆம் திகதியிடப்பட்ட 2437/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமையவும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

