Dec 16, 2025 - 10:03 PM -
0
தேசிய மின்சாரக் கொள்கை வரைவு, வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயகொடி அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கொள்கையைத் தயாரிப்பதற்காக அமைச்சரின் பரிந்துரையின் பேரில் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவினால் தயாரிக்கப்பட்ட கொள்கை வரைவே இவ்வாறு வலுசக்தி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்திற்கு அமைய இந்தத் தேசிய மின்சாரக் கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்தக் கொள்கை வரைவு பொதுமக்கள் கருத்துக்களைப் பெறும் செயல்முறைக்கும் உட்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் தேசிய மின்சாரக் கொள்கையாக அங்கீகரிக்கப்பட உள்ளது.

