Dec 17, 2025 - 04:27 PM -
0
நோர்வூர்ட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட 320k மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300 இற்கும் அதிகமான மக்கள் கடந்த 12 ஆம் திகதி பாரதி தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
கடந்த ஐந்து நாட்களாக முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களினுடைய வீடுகளை பரிசோதனை செய்து (NBRO) வௌியிட்ட அறிக்கையின் படி நேற்று (16) முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்தார்கள்.
(NBRO) சரியான முறையில் பரிசோதனைகளை செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட நிர்வாகம் குறைந்த பட்சம் நிலத்தையேனும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
--

