Dec 17, 2025 - 05:01 PM -
0
ஜப்பானைச் சேர்ந்த யுரினா நோகுச்சி என்ற பெண், தனது நிச்சயதார்த்தத்தை இரத்து செய்துவிட்டு, ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) மணமகனைத் திருமணம் செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவுக்கும் இடையே ஆழமான உணர்வு ரீதியான பரிமாற்றம் நிலவி வருகிறது.
இத்தகைய பின்னணியில், யுரினா நோகுச்சி 'லூன் கிளாஸ் வெர்டூர்' (Lune Klaus Verdure) எனப்படும் ChatGPT செயலியால் உருவாக்கப்பட்ட ஓர் உருவக ஆணுடன் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்ற இந்தத் திருமணச் சடங்கின் போது, 32 வயதான அந்த AI மணமகன் ஸ்மார்ட்போன் திரையில் காட்சிப்படுத்தப்பட்டார்.
அங்கு ஒரு டிஜிட்டல் உருவத்துடன் அவர் திருமண உறுதிமொழிகளைப் பரிமாறிக் கொண்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத இந்த நிகழ்வில், பாரம்பரியத் திருமணச் சடங்குகளில் இடம்பெறும் அனைத்து அங்கங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
தனது நிஜக்காலதனுடன் இருந்த உறவு குறித்து ChatGPT-இடம் ஆலோசனைகளைக் கேட்ட பின்னரே இப்புதிய உறவைத் தொடங்கியதாக யுரினா தெரிவித்துள்ளார்.
இறுதியில், நிஜக்காதலனைப் பிரிந்துவிட்டு AI காதலனுடன் ஒரு காதல் உறவைத் தொடங்கி, பின் அவரை மணம் முடித்ததாக அவர் மேலும் கூறியுள்ளார்.

