Dec 18, 2025 - 02:10 PM -
0
WealthTrust Securities Limited (WTS) நிறுவனத்தின் ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் நடவடிக்கை ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களுக்குள்ளேயே அளவுக்கதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், மாலை 4.30 மணிக்கு இதனை நிறைவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளது. ரூபா 500,837,708 தொகையை திரட்டுவதற்காக ரூபா 7 என்ற விலையில் 71,548,244 சாதாரண, வாக்குரிமை கொண்ட பங்குகள் வழங்கப்பட்டதுடன், இவை கொழும்பு பங்குச் சந்தையின் திரி சவி பலகையில் நிரற்படுத்தப்படவுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் அங்கீகாரம் பெற்ற முதன்மை வணிகராகவும், இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடமிருந்து பங்குத்தரகர் (கடன்) மற்றும் பங்கு வணிகர் (கடன்) ஆகியவற்றுக்கான அனுமதி உரிமங்களையும் பெற்றுள்ள WTS முதலீட்டாளர்கள் மத்தியில் வலுவான ஆர்வத்தை ஈர்த்துள்ளது. முறையே 2026 ஜனவரி 1 மற்றும் 2027 ஜனவரி 1 ஆகிய தினங்களிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கட்டம் கட்டமாக அதிகரிக்கப்படவுள்ள குறைந்தபட்ச பிரதான மூலதனக் காப்பு மட்டங்களை மேம்படுத்துவதற்கும், பிரதான மூலதனத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த திரட்டப்பட்ட நிதியானது பயன்படுத்தப்படும்.
நீண்ட கால மதிப்பைத் தோற்றுவிக்கும் விதமாக, அதன் அடிப்படை முகவர் செயற்பாடுகள் மூலமாக எழக்கூடிய சந்தை மற்றும் வட்டி வீத இடர்களை உள்வாங்கும் WTS ன் ஆற்றலை இந்த மூலதனத் திரட்டல் மேலும் வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

