Dec 18, 2025 - 02:19 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும் முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என்று அழைக்கப்பட்ட ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆனது அண்மையில் கொழும்பு Cinnamon Life இல் நடைபெற்ற 11ஆவது CMA ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விசேடத்துவ விருதுகளில் இரு முக்கிய கௌரவங்களுடன் அங்கீகரிக்கப்பட்டது. நிதி மற்றும் லீசிங் துறையில் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கைக்காக இரண்டாம் இடத்தில் (கூட்டு) பெயரிடப்பட்டதுடன் ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் ஒட்டுமொத்த விசேடத்துவத்திற்கான Merit விருதையும் பெற்றது. இச் சாதனைகள் வெளிப்படையான அறிக்கையிடலில் ஜனசக்தி பைனான்ஸின் தலைமைத்துவம், வலுவான நிர்வாகம் மற்றும் NBFI துறையில் தனது தரத்தை உயர்த்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்துக்காட்டுகின்றன.
வருடாந்தம் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் ஒத்துழைப்போடு இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படும் CMA விருதுகள், நிதி மற்றும் நிதி சாராத செயல்திறனை வழங்குவதில் தெளிவு, துல்லியம் மற்றும் பொறுப்புக்கூறலை வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கின்றன. ஜனசக்தி பைனான்ஸின் அறிக்கையானது நிதிசார் பெறுபெறுகளை நிலைத்தன்மை செயல்திறனுடன் இணைத்தல், நிர்வாக நடைமுறைகள் மற்றும் நீண்டகால மூலோபாய நோக்குடனான அதன் விரிவான அணுகுமுறை ஆகியவற்றிற்காக தனித்து விளங்கியது.
இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், “CMAஇன் ஒருங்கிணைந்த அறிக்கையிடலிற்கான விசேடத்துவ விருதுகளில் மீண்டும் ஒருமுறை அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமையடைகிறோம். இப் பாராட்டுகள், வெளிப்படைத்தன்மை, பொறுப்பான நிர்வாகம் மற்றும் எங்கள் அனைத்து பங்குதாரர்களுக்கும் அர்த்தமுள்ள மதிப்பை வழங்குவதில் எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கின்றன. இது போன்ற சாதனைகளை சாத்தியமாக்க துணை புரிந்த எமது அர்ப்பணிப்புள்ள ஊழியர்களின் கடின உழைப்பு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
International Integrated Reporting Council (IIRC) ஊக்குவிக்கும் சர்வதேச கட்டமைப்புகளுடன் ஜனசக்தி பைனான்ஸ் அதன் அறிக்கையிடல் நடைமுறைகளை தொடர்ந்து சீரமைத்து வருகிறது. இதன் மூலம் அதன் வெளிப்படுத்தல்கள் பொருத்தமானதாகவும் அணுகக்கூடியதாகவும் பங்குதாரர்களை மையப்படுத்தியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. இந்த அங்கீகாரம் அண்மையில் TAGS விருதுகள் 2024 இல் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் நிர்வாக வெளிப்படுத்தலில் சிறந்து விளங்கியதற்காக நிறுவனம் வென்ற வெண்கல விருதையும் பல அங்கீகாரச் சான்றிதழ்களையும் தொடர்ந்து பெறப்பட்ட கௌரவம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தனது வெளிப்படைத்தன்மை மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்கான தெளிவான அர்ப்பணிப்புடன் ஒருங்கிணைந்த அறிக்கையிடல் விசேடத்துவத்தில் முதலிடத்தில் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளதோடு அதன் பங்குதாரர் வலையமைப்பில் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

