வணிகம்
தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான ONE LOVE 2026 பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும்

Dec 18, 2025 - 02:24 PM -

0

தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான ONE LOVE 2026 பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறும்

இலங்கையின் இசை வரலாற்றில் புதிய அனுபவத்தைச் சேர்த்து, தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியான ONE LOVE 2026 - A Tribute to Bob Marley மார்ச் 27 முதல் 29, 2026 வரை பெந்தோட்டை கடற்கரையில் நடைபெறவுள்ளது. இசை நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் உலகளாவிய ரெகே இசை கலாச்சாரத்தின் வரலாற்றில் ஒரு கொண்டாட்டத்தைக் குறிக்கும் இந்த தருணத்தை அறிவிக்க செய்தியாளர் சந்திப்பொன்று கொழும்பு நகரில் அமைந்துள்ள NUWA Sri Lankaஇல் நடைபெற்றது. 

இந்த நிகழ்வுக்கு புகழ்பெற்ற 6 சர்வதேச ரெகே இசைக்கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர். ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியங்களில் நிகழ்த்தப்பட்ட ரெகே திறன்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் காணக்கூடிய மிகப்பெரிய வாய்ப்பாகவும் இது இருக்கும். கலைஞர்களில் பின்வருவோர் அடங்குவர், 

* Maxi Priest – The “Prince of Reggae”
* The Wailers
* Julian Marley மற்றும் Ky-Mani Marley – ரெகே ஸ்தாபகர் Bob Marleyயின் மகன்
* Inner Circle
* Big Mountain உள்ளடங்குகின்றன. 

மேலும், 4 சர்வதேச DJ இசைக்கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனர். ஒவ்வொரு நாளும் இரண்டு ரெகே கலைஞர்கள் நிகழ்ச்சி மேடையில் இணைவார்கள். அதன்படி, 

* மார்ச் 27 - The Wailers மற்றும் Maxi Priest
* மார்ச் 28 - Inner Circle மற்றும் Big Mountain
* மார்ச் 29 - Julian Marley மற்றும் Ky-Mani Marley என கலைஞர்கள் இசை நிகழ்ச்சியை வண்ணமயமாக்குவர். 

இந்த நிகழ்வின் தனித்துவம் காரணமாக, ரெகே இசையை விரும்பும் இந்தியா, மாலைத்தீவுகள், பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மேற்கத்திய சுற்றுலாப் பயணர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இலங்கை ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைக் காண வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐரோப்பாவிலும் கொழும்பில் தலைமையகத்தைக் கொண்ட இலங்கை நிறுவனமான One In A Million Entertainment Ltd. கரீபியன் என்டர்டெயின்மென்ட்டின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியானது, Shaggy, Diana King, Maxi Priest மற்றும் Big Mountain போன்ற உலகளாவிய கலைஞர்களை இலங்கைக்கு அழைத்து வரும் முயற்சியின் விளைவாகவும் குறிப்பிடப்படலாம். இந்த நிகழ்வுக்கு மேலும் ஒரு கவர்ச்சியை சேர்ப்பதற்காக, 2024 இன் இசை நாடக திரைப்படத்தின் முக்கிய நட்சத்திரமான Kingsley Ben-Adir மற்றும் அதன் தயாரிப்பாளர் Reinaldo Marcus Green ஆகியோரும் கலந்து கொள்வார்கள். 

பெப்ரவரி 6 ஆம் திகதியில் நடைபெறும் பொப் மார்லியின் 81 வது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் ஒத்திசைந்து நடத்தப்படும் இந்த இசை நிகழ்ச்சி, ரெகே இசை கலாச்சாரத்தையும் இசை முக்கியத்துவத்தையும் மேலும் உயர்த்துவது உறுதி. நிகழ்ச்சிக்கான ஒரு சாதாரண டிக்கெட் ஒரு நாளைக்கு ரூ. 10,000 க்கும், VIP டிக்கெட் ஒன்று ரூ. 50,000 க்கும் விற்கப்படும். மேலும், மூன்று நாள் இசை நிகழ்ச்சிகளையும் அனுபவிக்க விரும்பும் ரெகே இசை ரசிகர்களுக்கு, மூன்று நாட்களுக்கும் சாதாரண டிக்கெட்டுகள் ரூ. 25,000 க்கும், VIP டிக்கெட்டுகள் ரூ. 125,000 க்கும் பெறுவதற்கான சிறப்பு வாய்ப்பும் வழங்கப்படுகிறது. 

One Love நிகழ்வில் டிக்கெட் விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதி, இலங்கையில் இந்திய கலாச்சார சங்கத்தால் மேற்கொள்ளப்படும் குழந்தைகள் அனாதை இல்ல நீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். One Love நிகழ்வு, ஜமைக்காவில் அதன் தொண்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க Bob மற்றும் Rita Marley அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறது. 

இந்த நிகழ்விற்கு, 70 உறுப்பினர்களைக் கொண்ட ரெகே இசைக்கலைஞர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளடக்கிய ஒரு சர்வதேச தூதரகம் கலந்துகொள்ளும், மேலும் Melco Resorts & Entertainmentக்கு சொந்தமான, இலங்கையின் தனித்துவமான விருந்தோம்பல் சுற்றுலா தங்குமிடமான NUWA Sri Lanka அவர்களுக்கு விருந்தோம்பலை வழங்கும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் ஜனவரி 28 அன்று City of Dreams Sri Lanka ஆதரவாளர்களுக்கான Pop-Up நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த, City of Dreams Sri Lanka வின் துணைத் தலைவர் மற்றும் சொத்து பொது முகாமையாளர் திரு. மைக்கேல் ஹபாஷி, தெற்காசியாவின் முதல் ரெகே இசை நிகழ்ச்சியை ஏற்று நடத்துவதில் City of Dreams Sri Lanka மிகவும் மகிழ்ச்சியடைகிறது. கொழும்பின் தனித்துவமான பொழுதுபோக்கு மையமாக, நகரின் கலாச்சார மற்றும் கலைத் திறன்களை மேம்படுத்துவதற்கு நாங்கள் அர்ப்பணித்துள்ளோம். உலகப் புகழ்பெற்ற ரெகே கலைஞர்களை இலங்கை மேடையில் கொண்டு வருவதன் மூலம் படைப்பாற்றல் மற்றும் கலைகளை ஆதரிப்பதற்கும், இலங்கைக்கு உலகளாவிய தனித்துவமான அனுபவங்களைக் கொண்டு வருவதற்கும் நமது அர்ப்பணிப்பு நன்றாக பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05