Dec 18, 2025 - 03:47 PM -
0
இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது, இன்றைய இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு, அவர்கள் தமது குறிக்கோள்களை அடைய வலுவூட்டும் தனது அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தொழில்நுட்பக் கல்விக்கான DIMO Academy for Technical Studies (DATS) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தமொன்றில் (MoU) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் மேம்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிகளை தொடர விரும்பும் மாணவர்கள் மத்தியில் வங்கியின் கல்விக் கடன்களை ஊக்குவிப்பதே நோக்கமாகும்.
இந்த பங்குடைமையின் மூலம், DIMO-வின் தொழிற்பயிற்சி பிரிவான DIMO Academy-யில் இணைந்து கொள்ளும் மாணவர்கள், கொமர்ஷல் வங்கியின் ஆர்வமூட்டும் கடன் வசதிகளின் ஆதரவுடன், Automotive Technology, Plant Engineering, Electrical மற்றும் Electronic Systems, Mechatronics மற்றும் Automation, Hybrid மற்றும் EV Technologies, Industrial LPG மற்றும் HVAC, போன்ற துறைகளில் மேம்பட்ட கல்வியினைத் தொடர முடியும். இந்த கல்விக் கடன்கள் ரூ. 10 மில்லியன் வரை நிதியுதவியை வழங்குகின்றன இது கற்கைநெறி கட்டணத்தின் 75% வரை உள்ளடக்குகிறது. மேலும், அதிகபட்சம் இரண்டு வருடங்கள் வரை சலுகைக் காலத்தையும் ஆவணச் செலவுகளில் 50% கழிவினையும் வழங்குவதன் மூலம்,மாணவர்களும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் பொருளாதார சுமையை குறைக்கிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க மற்றும் DIMO நிறுவனத்தின் குழும முகாமைத்துவப்பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. கஹனத் பண்டிதகே ஆகியோர், இரு நிறுவனங்களின் சிரேஷ்ட பிரதிநிதிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
DIMO Academy என்பது இலங்கையின் முன்னணி தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். மேம்பட்ட உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள், மற்றும் செயல்முறை அடிப்படையிலான பயிற்சிகள் மூலம், மாணவர்கள் கருதுகோள் அடிப்படையிலான கல்விக்கும் நடைமுறை உலகப் பயன்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் வகையில் பயனடைகிறார்கள். DIMO Academy ஆனது பொருளாதாரத்தின் மிகச் செயல்திறன் மிக்க துறைகளில் சிறந்து விளங்குவதற்காக அதன் மாணவர்களைத் தயார் செய்யும் வகையில், தொழில்துறை நோக்கமுடைய கல்வியை வழங்குகிறது.
இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும் உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளின் பட்டியலில் முதன் முதலாக உள்ளடக்கப்பட்ட இலங்கையின் வங்கியாகவும் திகழும் கொமர்ஷல் வங்கி, கொழும்பு பங்குச் சந்தையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

