Dec 18, 2025 - 03:48 PM -
0
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் "கோட்டா கோ கம" போராட்டக்களம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், அன்றைய காலகட்டத்தில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக போராட்டக்காரர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரிக்க அப்போதைய கொழும்பு பிரதம நீதவான் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்தத் தீர்மானத்திற்கு எதிராக போராட்டக்காரர் ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டை விசாரணை செய்த பின்னரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்தத் தீர்ப்பை அறிவித்தார்.

