செய்திகள்
காத்தான்குடியில் இளைஞன் மீது கத்திக்குத்து

Dec 18, 2025 - 05:36 PM -

0

காத்தான்குடியில் இளைஞன் மீது கத்திக்குத்து

காத்தான்குடியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் வைத்து இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தாக்குதலை நடத்தியவர் பொலிஸில் சரணடைந்துள்ளார். 

காத்தான்குடி 06, அப்துல் லத்தீப் சின்னலெவ்வை வீதியிலுள்ள சிகை அலங்கார நிலையமொன்றில் இன்று (18) காலை இளைஞர் ஒருவர் சிகை அலங்காரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

இதன்போது அங்கு நுழைந்த மற்றுமொரு இளைஞர், அவர் மீது கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 

இத்தாக்குதலில் ஹைராத் நகரைச் சேர்ந்த 25 வயதான இளைஞரே படுகாயமடைந்துள்ளார். 

தாக்குதலை நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற போதிலும், பின்னர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

காயமடைந்த இளைஞருக்கும் தாக்குதல் நடத்தியவருக்கும் இடையே கடந்த சில தினங்களாக நிலவி வந்த வாய்த்தர்க்கம் மற்றும் மோதலே இந்த கத்திக்குத்து சம்பவத்திற்கு பின்னணியாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05