Dec 18, 2025 - 06:31 PM -
0
கண்டி, ஹுன்னஸ்கிரிய நகருக்கு அருகாமையில் இடம்பெற்ற மண்சரிவினால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்தப் பிரதேசத்தில் நிலவிய மழையுடன் இன்று காலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலவும் அபாய நிலை காரணமாக, அருகிலிருந்த 2 பாதுகாப்பு நிலையங்களில் தங்கியிருந்த 90 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

