Dec 23, 2025 - 04:48 PM -
0
உள்ளூர் உற்பத்தித் துறைகளை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஆலோசனைக் குழுக்களை அமைப்பதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியில் ஏற்படும் கொள்கை ரீதியான சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில், உற்பத்தித் துறைகளை உள்ளடக்கியதாக ஏற்கனவே 20 ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்தக் குழுக்களால் உள்ளடக்கப்படாத மேலும் 07 விசேட கைத்தொழில் துறைகளுக்கு ஆலோசனைக் குழுக்களை அமைக்க வேண்டிய அவசியம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள், வர்த்தக சபைகள்/சம்மேளனங்கள், கல்விசார் நிறுவனங்கள் மற்றும் குறித்த துறை சார்ந்த நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 25 பேருக்கு மேற்படாத உறுப்பினர்களைக் கொண்டு இந்தக் குழுக்கள் அமைக்கப்படும்.
புதிதாக ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ள 07 துறைகள்:
சுதேச ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறை
இனிப்புப் பண்டங்கள் சார்ந்த உற்பத்தித் துறை
பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கைத்தொழில் துறை
கோழி இறைச்சி சார்ந்த கைத்தொழில் துறை
அலங்கார மீன்கள் மற்றும் கடற்பாசி சார்ந்த கைத்தொழில் துறை
கலைப்படைப்புக்கள் சார்ந்த கைத்தொழில் துறை
நிகழ்வு முகாமைத்துவத் தொழில்துறை

