Dec 24, 2025 - 08:05 PM -
0
உணவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் 500 அமெரிக்க டொலர் பணத்தைத் திருடிய நபர் ஒருவரை உணவட்டுன பொலிஸ் சுற்றுலாப் பணியகத்தினர் கைது செய்துள்ளனர்.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான முறைப்பாடு கிடைக்கப்பெற்று 12 மணித்தியாலங்கள் முடிவடைவதற்குள் சந்தேக நபர் இந்துருவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உணவட்டுன பொலிஸ் சுற்றுலாப் பணியகத்தின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் அமில பிரியங்கர, பொலிஸ் சார்ஜன்ட் (35553) நிசாந்த, பொலிஸ் சார்ஜன்ட் (18372) பிரேமரத்ன ஆகிய அதிகாரிகள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர்.
கைதான சந்தேக நபரை நாளை (25) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

