Dec 24, 2025 - 10:32 PM -
0
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட 15 பேர் கொண்ட ஆசிய ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைத்துள்ளதாக ஆசிய ரக்பி சம்மேளனம் இன்று (24) மாலை அறிவித்துள்ளது.
சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆசிய இளையோர் ரக்பி தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு மீண்டும் கிடைத்துள்ளது.
இதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கை இத்தொடரை நடத்தியிருந்தது.
அன்று ஜீவன் குணதிலக்கவின் தலைமையில் களமிறங்கிய இலங்கை அணி, மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
அதன் விளைவாக, சிலியில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண ரக்பி தொடருக்குத் தகுதி பெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பையும் இலங்கை அன்று பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

