Dec 25, 2025 - 11:29 AM -
0
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர, மகிந்தபுர சந்தியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற சமயத்தில் பேருந்தில் சுமார் 21 பயணிகள் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த 14 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலை மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

