Dec 25, 2025 - 03:43 PM -
0
2025 ஜனவரி 01 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகள் ஊடாக மொத்தமாக 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
அவற்றில் 73 ரி-56 ரக துப்பாக்கிகள், 59 ரிவோல்வர்கள் 83 பிஸ்டல்கள் மற்றும் 2,126 ஏனைய துப்பாக்கிகள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வருடத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,793 கிலோ 139 கிராம் ஹெரோயின், 3,683 கிலோ 163 கிராம் ஐஸ், 16,686 கிலோ 62 கிராம் கஞ்சா ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் 37 கிலோ 899 கிராம் கொக்கைன் மற்றும் 746 கிலோ 673 கிராம் ஹஷிஸ் போதைப்பொருட்களையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இதேவேளை, ஜனவரி 01 ஆம் திகதி முதல் இதுவரை பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது 790,461 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 6,641 நபர்களும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 73,634 நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 48,345 நபர்களுக்கான திறந்த பிடியாணைகளை நடைமுறைப்படுத்த பொலிஸாருக்கு முடிந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

